தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் என ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 6) நடைபெற்றுவருகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக அனைத்துத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
அதில், "தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதேபோல, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில வாக்காளர்களையும் அதிகளவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: அஸ்ஸாமில் தொடர் நிலநடுக்கம்: நிலைமையைக் கண்காணிக்கும் பிரதமர் மோடி