ETV Bharat / bharat

பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவிற்கு மெட்ரோவில் பயணம் செய்த மோடி..!

டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க சென்ற பிரதமர் மோடி தனது சொந்த வாகனத்தை பயன்படுத்தாமல் மெட்ரோவில் சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவிற்கு மெட்ரோவில் பயணம் செய்த மோடி

author img

By

Published : Jun 30, 2023, 11:05 PM IST

பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவிற்கு மெட்ரோவில் பயணம் செய்த மோடி

டெல்லி: டெல்லி பல்கலைக்கழகம் 1922 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி நிறுவப்பட்டது. கடந்த நூறு ஆண்டுகளில் பல்கலைக்கழகம் அபரிமிதமாக வளர்ந்து மற்றும் விரிவடைந்து தற்போது 86 துறைகள், 90 கல்லூரிகள், 6 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களைக் கொண்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு நிறைவு விழா (Delhi University Centenary Celebration) இன்று (ஜூன் 30) நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நிலையில் விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி டெல்லி மெட்ரோ ரெயியில் பயணம் செய்தார்.

விழாவில் கலந்துகொள்ள மோடி தனது சொந்த வாகனத்தை பயன்படுத்தாமல் மெட்ரோவை தேர்வு செய்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மெட்ரோவில் அவர் பயணம் செய்யும் போது பிரதமர் என சிறப்பு கவனிப்பில் செல்லாமல், சாதாரண மனிதரைப் போல தானியங்கு படிக்கட்டில் இறங்கி ரயிலுக்காக காத்திருந்து சென்றார்.

பின் லோக் கல்யாண் மார்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் ஏறினார். பயணத்தின் போது, மோடி மெட்ரோவில் தன்னுடனன் பயணித்த சக பயணிகளுடன் கலந்துரையாடினார். மேலும் அவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்தார். அதன் பின் விஷ்வ வித்யாலயா மெட்ரோ நிலையத்தில் இறங்கினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “மெட்ரோவில் டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு செல்லும் போது இளைஞசர்கள் எனது சக பயணிகளாக இருந்தது மகிழ்ச்சி தருனமாக இருந்தது” என தெரிவித்தார். மேலும் அவர் பயணத்தின் போது எடுத்த புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.

டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்ட மோடி பல்கலைக்கழகத்தில் கணினி மையம், மற்றும் அகாடமி கட்டிடம் உள்ளிட்ட 3 புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி பல்வேறு திட்டப்பணிகளையும் திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: டிஜிபி, காவல் ஆணையர் பதவியேற்பு.. ரவுடியிசம் ஒழிக்கப்படும் - டிஜிபி உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.