மாணவர்கள் அச்சமின்றி தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து, 'பரிக்ஷா பே சர்சா' என்ற தலைப்பில் இன்று (ஏப்.7) மாலை 7 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடல் மேற்கொண்டார். இதில், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதமர் மோடி பேசியதாவது, “கோவிட்-19 பரவல் காரணமாக மாணவர்களை நேரில் சந்திக்க முடியததால், காணொலி வாயிலாக சந்திக்கிறேன். மாணவர்கள் அச்ச உணர்வோடு தேர்வை அணுக வேண்டாம்.
மன அழுத்தம் இன்றி தேர்வை எதிர்கொள்ள வேண்டும். முதலில் கடினமான கேள்விகளுக்கு பதில் எழுதுங்கள். தேர்வுக்கான நேரத்தை சரிபாதியாக எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்து பாடங்களுக்கும் முறையான கவனத்தை செலுத்துவது அவசியம்.
அதேநேரம், மாணவர்கள் வாழ்வில் தேர்வு மட்டுமே கடைசி போராட்டம் என்று நினைத்துவிடக் கூடாது. இது வாழ்க்கையில் ஒரு பகுதியே என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் காரணத்தில் அவர்களின், மற்ற திறமை வெளிவருவதில்லை.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தூண்டுகோலாக இருந்து அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும். தேர்வு மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்கும் என்ற தவறான எண்ணம்தான் மாணவர்களுக்கு பயம் ஏற்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க: மேற்குவங்க பாஜக தலைவர் கான்வாய் மீது தாக்குதல்!