அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்-30) காந்திநகரில் இருந்து ராஜ்பவனுக்கு சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வந்தது. உடனே பிரதமர் மோடி வழிவிட உத்தரவிட்டதால் கார் சிறிது நேரம் ஓரமாக நிறுத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோவை பாஜக சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமக் மோடி வழிவிட்ட ஆம்புலன்ஸில் 90 வயது மூதாட்டி இருந்ததும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. பொதுவாக போக்குவரத்து விதிகளின்படி, இதுபோன்ற விவிஐபி நடமாட்டம் இருந்தாலும் ஆம்புலன்ஸ்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதன்படி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள், பிரதமரின் வாகனம் செல்ல வேண்டிய பாதை வழியாக ஆம்புலன்ஸ் செல்ல அனுமதித்து உள்ளனர். ஆம்புலன்ஸ் சென்ற பின் பிரதமரின் வாகனம் சென்றுள்ளது.
இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய அகமதாபாத் போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் மயங்க்சிங் சாவ்டா, "பிரதமர் மோடியின் வாகனம் சென்ற சாலையில் சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்தது. நாங்கள் அதை தடுக்கவில்லை. அந்த ஆம்புலன்ஸ் தனக்கு பின்னே வருவதை அறிந்த பிரதமரும் வாகனத்திற்கு வழிவிட்டார். அந்த ஆம்புலன்ஸ் ஷாஹிபாக் பகுதியில் உள்ள எஸ்ஜிவிபி மருத்துவமனைக்கு சென்றது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:52 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ.வேகம்... விமானத்தில் கிடைக்கும் வசதிகள்... வந்தே பாரத் ரயில் சிறப்பம்சங்கள்...