இந்தியாவில் நிலவும் கோவிட் தொற்று இரண்டாம் அலை குறித்து ஆய்வு மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மாநில நிர்வாகத்திற்கு முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
அதன்படி, ”நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும் குறைந்த அளவில் தொற்று மிச்சமிருந்தாலும் அது பெரும் சவாலை ஏற்படுத்தும் என்பது நமது அனுபவத்தில் தெரிவிக்கிறது.
வைரஸ் தொற்றின் உருமாற்றங்கள், அவற்றின் தாக்கங்களுக்கு ஏற்ப நாமும் அதை எதிர்கொள்ளும் யுக்தியை மாற்றி செயலாற்ற வேண்டும். எனவே, அலுவர்கள் தொடர் கண்காணிப்பிலிருந்து அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதற்கேற்ப கொள்கை முடிவானது வகுக்கப்படும்.
சிறிய கவனக் குறைவும் பெரும் இடர்பாட்டில் கொண்டு சேர்த்துவிடும். குழந்தைகள் மற்றும் இளையோரை இந்தத் தொற்றிலிருந்து பாதுகாக்க தனிக் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
இதையும் படிங்க: கேரள முதலமைச்சரை பாராட்டிய மோடி; மாநிலங்கள் தடுப்பூசி வீணாவதைத் தவிர்க்க அறிவுறுத்தல்