முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 105ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆர், பிறந்தநாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார்.
அதில், "பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன.
அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது!" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: HOROSCOPE: ஜனவரி 17 ராசிபலன் - உங்க ராசிக்கு எப்படி?