திருவள்ளுவர் தினம் இன்று (ஜன. 15) கொண்டாடப்படுவதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்துச் செய்தியினைத் தெரிவித்துள்ளார். தனது வாழ்த்து செய்தியில், "போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன.
அவரது லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த சில ஆண்டுகளாகவே பழந்தமிழ் நூல்களையும், குறிப்பாக திருக்குறளையும் பல இடங்களில் மேற்கோள்காட்டி பேசிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிபிஐ அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு!