டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக செப்டம்பர் 22ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார்.
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 2021 ஆண்டின் பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடைசியாக 2019ஆம் ஆண்டு பிரதமர் அமெரிக்கா சென்றார். ஹூஸ்டன் நகரில் நடந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் அப்போது அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப்புடன் சேர்ந்து பிரதமர் மோடி பங்கேற்றார்.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமில்லா உறுப்பினராக இருக்கும் இந்தியா, கடந்த ஒரு மாதமாக தலைமை வகித்தது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய சமயத்தில், பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இச்சூழலில், அமெரிக்க செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 24ஆம் தேதி நாற்கர கூட்டமைப்பு நாடுகளுக்கிடையேயான (இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா) உச்சி மாநாட்டில் (Quad Summit) கலந்துகொள்கிறார்.
அதேபோல அமெரிக்க அதிபர் ஜோ பைடளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது இருதரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கிறார். இதையடுத்து 25ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இன்னும் வெளிவரவில்லை. கடைசியாக 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். அப்போது ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.