டெல்லி: நாடு முழுவதும் உள்ள தகுதியுடைய உழவருக்கு, பிரதமரின் உழவர் உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதன்படி, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மூன்று தவணைகளாகப் பிரித்து உழவரின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
அந்தவகையில், இன்று நண்பகல் 12.30 மணியளவில் தகுதியுடைய உழவரின் வங்கிக் கணக்குகளில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.2000 விடுவிக்கிறார். இது குறித்து பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்பது கோடியே 75 லட்சத்துக்கும் அதிகமான உழவர் குடும்பங்களுக்கு சுமார் 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும்.
இந்த நிகழ்ச்சியின்போது நரேந்திர மோடி உழவருடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து, நாட்டு மக்களிடமும் அவர் உரை நிகழ்த்துகிறார். உழவர் உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் இதுவரை மொத்தம் ரூ.1.38 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை விடுவிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடர்ந்த வனம்; 100 வயது கடந்த மூதாட்டி: சுயநலமின்றி உதவும் தபால் ஊழியர்