டாக்கா: பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசத்தின் இரண்டாம் நாள் பயணமான இன்று (மார்ச் 27) ஜெஷோரேஷ்வரி, ஓரகண்டி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்துகிறார்.
இதைத்தொடர்ந்து, 51 சக்தி பீடத்தின் கோயில்களில் ஒன்றான ஜெஷோரேஸ்வரி காளி கோயிலில் பூஜை செய்கிறார். அதன்பின்னர், கோபால்கஞ்ச் மாவட்டத்தின் துங்கிபாராவில் உள்ள அந்நாட்டின் 'தேசத்தின் தந்தையின் கல்லறை' பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் நினைவிடத்தையும் பிரதமர் பார்வையிடுவார்.
பிரதமர் மோடியின் பயணத்திற்கு முன்னதாக சக்திஹிராவில் உள்ள ஜெஷோரேஸ்வரி கோயிலை வங்கதேச அலுவலர்கள் புதுப்பித்துள்ளனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, “பண்டைய ஜஷோரேஸ்வரி காளி கோவிலில் பிரார்த்தனை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்” என ட்வீட் செய்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: 'காலில் விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன்' - இறைஞ்சும் சரத்குமார்