ETV Bharat / bharat

5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

author img

By

Published : Oct 1, 2022, 11:29 AM IST

5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

Etv Bharat5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

டெல்லி : அண்மையில் மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகள் ஏலம் விடப்பட்டது. இதில் பங்கேற்ற ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை ஏலம் எடுத்தன.

இந்நிலையில் நாட்டில் 5 ஜி சேவை இன்று தொடங்குகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

முதலில், குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் 5ஜி சேவை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4ஜி சேவையை விட 5ஜி சேவை பல மடங்கு வேகம் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.