டெல்லி: பெண்கள் சுய உதவிக் குழு, தீன்தயாள் அந்தியோதயா திட்டம், தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்ட உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆக.12) மதியம் 12.30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடுகிறார்.
இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள பெண்கள் சுய உதவிக் குழுவினரின் வெற்றிக் கதைகளின் தொகுப்பு, விவசாய வாழ்வாதாரங்கள் குறித்த கையேடு ஆகியவைற்றை பிரதமர் வெளியிடுகிறார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 7,500 பேருக்கு 25 கோடி ரூபாய் முதலீட்டு நிதியையும், தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 75 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு 4.13 கோடி ரூபாய் நிதியையும் விடுவிக்கிறார்.
இதையும் படிங்க: தொழில்சாலைகள்தான் வளர்ச்சியின் தூண்கள் - பிரதமர் மோடி