டெல்லி: இமாச்சல பிரதேச மாநிலம், தடுப்பூசிக்கு தகுதியுடைய அனைவருக்கும் முதல் டோஸை செலுத்தியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இமாச்சல் பிரதேச மாநில சுகாதாரப் பணியாளர்கள், தடுப்பூசி திட்டப் பணியாளர்களுடன் இன்று(செப். 6) காலை 11 மணியளவில் உரையாடவுள்ளார்.
"இமாச்சல பிரதேசம், மாநிலத்தில் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு காணொலி மூலம் மாநிலத்தின் பல பயனாளிகள் மற்றும் சுகாதார ஊழியர்களுடன் தொடர்பு கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்" என பிரதமர் மோடி இதுதொடர்பான ட்வீட் ஒன்றை செய்திருந்தார்.
"மலைகள் அதிகம் உள்ள இமாச்சல பிரதேசத்தில், அனைவருக்கும் முதல் டோஸ் செலுத்தப்பட்டதற்கு முக்கிய காரணம், அரசின் நடவடிக்கை. மேலும், ஆஷா தொழிலாளர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை செய்தது பாராட்டத்தக்கது" என பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
மேலும், பெண்கள், முதியவர்கள், தொழிற்சாலைத் தொழிலாளர்கள், கூலி வேலை பார்ப்பவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய முக்கியமான நடவடிக்கை எனவும் அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மருத்துவ படிப்பில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பாடம் - சர்ச்சையில் ம.பி. அரசு