அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக அங்கு செல்ல உள்ளார். அந்த வகையில், ரூ.3,050 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இந்த பயணத்தின்போது, விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக அகமதாபாத் போபாலில் கட்டப்பட்டுள்ள IN-SPACe தலைமையகத்தை திறந்து வைக்கிறார்.
IN-SPACe என்பது விண்வெளித் துறையில் அரசு சாராமால் தனியார் துறைகள் ஆராய்ச்சி செய்யவும், பங்களிப்பை உறுதி செய்யவும் உருவாக்கப்பட்ட மையாகும். இந்த மையம் இஸ்ரோவின் உயர் அலுவலர்கள், விஞ்ஞானிகள் தலைமையில் இயங்கும். ஆனால் ஒப்பந்தங்கள் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படும்.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் பரிசுகளுடன் ராக்கெட்டை ஏவிய ஸ்போஸ் எக்ஸ்!