வாரணாசி: தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்தும் வகையில் "காசி தமிழ் சங்கமம்" என்ற நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
நாளை(நவ.17) தொடங்கி, டிசம்பர் 16ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், கலை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து நிகழ்ச்சிகளும் காசி இந்து பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடைபெறவுள்ளன.
இந்நிகழ்ச்சியில் வரும் 19ஆம் தேதி அன்று, பிரதமர் நநேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இதற்காக வரும் 19ஆம் தேதி பிற்பகலில் விமானம் மூலம் வாரணாசி வரவுள்ளார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்கும் பிரதமர், அங்குள்ள தமிழ் பேசும் மக்களிடமும் உரையாட இருப்பதாகவும், சுமார் 3 மணி நேரம் அவர் காசியில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையை முன்னிட்டு வாரணாசியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பு பாதுகாப்புக்குழு இன்று வாரணாசி செல்கிறது.
இதையும் படிங்க: ஆண்டுக்கு 3000 இந்தியர்களுக்கு சிறப்பு விசா - பிரிட்டன் பிரதமரின் ஹேப்பி நியூஸ்!