கோபன்ஹெக்: டென்மார்க்கில் நடைபெறும் இரண்டாவது இந்தோ- நார்டிக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொகிறார். இந்த உச்சி மாநாட்டில் டென்மார்க், ஐஸ்லாந்து,பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் ஊரடங்கினால் ஏற்படும் விளைவுகள், பருவநிலை மாற்றம், புதிய கண்டுபிடிப்புகள், மாற்று சக்தி பயன்பாடு, உலக பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் பல நாடுகளின் தலைவர்களை சந்திக்கும் பிரதமர் மோடி இருதரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துகிறார். இதன் மூலம் நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்த முடியும் என தெரிவித்தார்.
பின்னர் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (மே4) பிரான்ஸ் சென்று அங்கு பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மார்க்கனுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார். மூன்று நாள் அரசு முறை பயணத்தில் முதல் நாள் ஜெர்மனியின் பெர்லின் சென்று ஜெர்மன் அதிபர் ஒலாஃப்டன் பேச்சு வார்த்தை நடத்தினர். இரண்டாம் நாளான நேற்று டென்மார்க் சென்றார். இன்று பாரிஸ் சென்று அவரது அரசு முறை பயணத்தை முடித்து இன்றுடன் நாடு திரும்புகிறார்.
இதையும் படிங்க:பிரதமர் மோடி- டென்மார்க் ராணி சந்திப்பு!