பாஜக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தில் ஹரக்பூர் பகுதியிலும், அஸ்ஸாமின் ஷப்வா பகுதியிலும் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், அந்தப் பரப்புரையில் பாஜகவின் வளர்ச்சித் திட்டம் குறித்து விரிவாக விவரிக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். பிரதமரின் வருகையையொட்டி, இரு மாநிலங்களிலும் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதி தொடங்குகிறது.
அதேபோல, 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கும், முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதிதான் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்ரீநகரில் ஃபர்ஸ்ட் நைட் விமானத்தை இயக்கிய கோஏர்!