ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்றும், நாளையும் நடக்க இருக்கும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதற்காக, நேற்று (ஜூலை 2) ஹைதாராபாத் வந்தடைந்தார்.
அந்த வகையில் இன்று (ஜூலை 3) செயல்குழுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். இதையடுத்து செகந்திராபாத்தில் உள்ள பரேட் மைதானத்தில் மாலை நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். இந்த பொதுக்கூட்டத்திற்கு ‘விஜய சங்கல்ப சபா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதில் 10ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர். 3 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி அடுத்தாண்டு நடக்க இருக்கும் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக தெலங்கானாவில் நடத்த கூட்டத்தில் பங்கேற்ற மோடி, ஆளுங்கட்சியை கடுமையாக சாடினார். குடும்ப அரசியலே மக்களாட்சிக்கு பெரிய எதிரி. விரைவில் இது ஒழிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் நேற்று (ஜூலை 2) எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக கோரும் கூட்டம் ஹைதராபாத்தில் நடந்தது. இதில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மோடியை விமர்சித்தார். அதோடு மோடி வருகைக்கு அரசு சார்பாக சந்திரசேகர் ராவ் வரவேற்பு அளிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஹைதராபாத்தில் செயற்குழு கூட்டம் - தென் மாநிலங்களுக்கு பாஜக ஸ்கெட்சா...?