இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக, “டெல்லியில் உள்ள என்டிஎம்சி அரங்கில் இன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை கூட்டம் நடைபெறும்.
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாடு, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கான பொறுப்பாளர்களை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்திருந்தார். இவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
இதையும் படிங்க...பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை முறியடிப்பாரா நாராயணசாமி?