அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம், சூரத் மெட்ரோ ரயில் ஆகியவற்றுக்கான பூமி பூஜையை இன்று (ஜன. 18) காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
பின்னர் காணொலி மூலமாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "ரூ .17,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கான பணிகள் இன்று முதல் தொடங்குகின்றன. இது கரோனா பரவலுக்கு இடையில் நாட்டின் புதிய உள்கட்டமைப்பு மேம்படுத்துவதை காட்டுகிறது. நாட்டின் இரண்டு முக்கிய வணிக மையங்களான அகமதாபாத், சூரத் ஆகியவை தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை மேம்படுத்தும் நகரங்களாகும்.
அதுமட்டுமின்றி, இந்த மெட்ரோ திட்டங்கள் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு அடித்தளமாக அமையும். இதன் மூலம் நம் நகரங்களுக்கு வலுவான போக்குவரத்து வசதி கிடைக்கும்” என்றார்.
மேலும், முந்தைய ஆட்சியின்போது நாட்டில் மெட்ரோ ரயில்வே விரிவாக்கம் குறிப்பிடத்தக்க வகையில் இல்லை என்றும் மெட்ரோ பணிகள் குறைவாகவே இருந்தன எனவும் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க...அகமதாபாத், சூரத் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பூமி பூஜை: காணொலி வாயிலாக இணையும் பிரதமர் மோடி!