டெல்லி: G20 உச்சி மாநாட்டில், ஆப்பிரிக்காவை நிரந்தர உறுப்பினராக மாற்றி இந்தியா தனது தலைமைத்துவத்தை நிரூபித்துள்ளது. மேலும், மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்தியா - மத்திய கிழக்கு நாடுகள் - ஐரோப்பாவை இணைக்கும் பொருளாதார வழித்தடம் நூறு ஆண்டுகள் மேலும், உலக வர்த்தகத்தின் மைல் கல்லாக அமையும். இதற்கான, ஏற்பாடு இந்தியாவில் தொடங்கப்பட்டது என்பதை வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும் என பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
சந்திரயான்-3 வெற்றிக்குப் பின், G20 உச்சி மாநாட்டின் வெற்றி, இந்தியர்கள் ஒவ்வொருவரின் மகிழ்ச்சியையும், இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும், இந்த உச்சி மாநாட்டில் இந்தியா தனது தலைமையை நிரூபித்துள்ளது. இந்த நிகழ்வில், டெல்லி பல்கலைக்கழக மாணவர்களை G20 உடன் இணைக்கும் திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
G20 பல்கலைக்கழக இணைப்புத் திட்டம், டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் இதில் இனைத்துக் கொள்வார்கள். இதில், பல முக்கிய நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு கல்லூரி மாணவரும் செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என விரும்புகிறேன் எனத் தனது 105வது மன் கி பாத் என்னும் மனதின் குரல் வானொலி ஒலிபரப்பின்போது பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: Nellai - Chennai Vande Bharat Train : நாட்டில் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி துவக்கி வைப்பு!
G20 உச்சி மாநாடு வெற்றிக்குப் பிறகு, உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவைப் பற்றியும், அதன் பல்வேறு கலாச்சாரங்கள் பற்றியும் அறிய ஆர்வமாக உள்ளனர். இதனால், நாட்டின் சுற்றுலா அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், இந்தியாவில் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என பிரதமர் தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள சாந்திநிகேதன் மற்றும் கர்நாடக மாநிலத்திலுள்ள ஹோலிசாலா கோயில்களை யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாட்டு இடங்களை உலக பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரித்த இந்தியாவிற்குப் பெருமைக்குரியது என பிரதமர் கூறினார். ‘அமிர்தக் கல்’ நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமையாற்றும் காலம் எனத் தெரிவித்தார்.
காந்தி ஜெயந்தி அன்று நாடு முழுவதும் தூய்மை தொடர்பான பல திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்தியா முழுவதும், மத்திய அரசு அலுவலகங்களில் "Swachhata hi Seva" பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றன. அக்டோபர் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு தூய்மை குறித்த நிகழ்வு நடைபெற உள்ளன. இந்திய மக்கள் அனைவரிடமும் வேண்டுகோள் ஒன்றை வைக்க விரும்புகிறேன். அனைவரும் நேரம் ஒதுக்கி இந்த தூய்மை பிரச்சாரத்தில் இணைய வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்திய மக்கள் அனைவரும், உங்கள் தெரு, சுற்றுப்புறம் மற்றும் அனைத்து பொது இடங்களிலும் இந்த பிரச்சாரத்தில் இணையலாம். இந்தியா முழுவதும் தூய்மை உறுதி செய்யப்பட வேண்டும். இதுவே, காந்திக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என பிரதமர் இன்றைய (செப்.24) மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
இதையும் படிங்க: Ind Vs Aus 2nd ODI : மழையால் நின்ற ஆட்டம் மீண்டும் தொடங்கியது!