ETV Bharat / bharat

புதிய பாதுகாப்பு அலுவலக வளாகங்கள் திறப்பு - பிரதமர் மோடி

டெல்லி கஸ்தூரிபாய் காந்தி மார்க் மற்றும் ஆப்பிரிக்க அவென்யூ பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அலுவலக வளாகங்களை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

புதிய பாதுகாப்பு அலுவலக வளாகங்கள் திறப்பு

author img

By

Published : Sep 16, 2021, 6:55 PM IST

டெல்லி: கஸ்தூரிபாய் காந்தி மார்க் மற்றும் ஆப்பிரிக்க அவென்யூ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு துறையின் புதிய அலுவலக வளாகங்களை பிரதமர் மோடி இன்று (செப்.16) திறந்துவைத்தார்.

அதன் பின் ராணுவம், கடற்படை, விமானப்படை அலுவலர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், "டெல்லி இன்று புதிய இந்தியாவின் பார்வைக்கு ஏற்ப முன்னேறி வருகிறது. இந்தப் புதிய பாதுகாப்பு அலுவலக வளாகங்கள் நவீன வசதிகளுடனும் சிறந்த தொழில்நுட்பங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியாவின் சின்னமாக, இந்த வளாகங்களில் இந்திய கலைஞர்களின் கண்கவர் கலை பொருட்கள் இடம்பெற்றிருப்பது பாராட்டிற்குரியது" என்றார்.

டெல்லி பற்றி பேசிய அவர், ”நாட்டின் தலைநகரம், அந்நாட்டின் சிந்தனை, உறுதித் தன்மை, வலிமை மற்றும் கலாசாரத்தின் சின்னமாக செயல்பட வேண்டும். எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு நவீன உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

சென்ட்ரல் விஸ்டா திட்டதை விமர்சிப்பவர்கள் புதிய பாதுகாப்பு அலுவலக வளாகம் பற்றி பேசமாட்டார்கள். ஏனெனில் அவர்களது பொய் வெளிப்பட்டுவிடும் என்று எதிர்க்கட்சிகளை மறைமுகமாக சாடினார்.

இந்த வளாகங்கள் கட்டி முடிக்க 24 மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 12 மாதங்களிலேயே பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த திட்டத்தால் கரோனா காலத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பெற்றனர்.

இதற்கு முன்பு இதுபோன்ற வளாகங்கள் ஐந்து மடங்கு அதிகமான நிலப்பரப்பில் கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட இந்தப் பாதுகாப்பு அலுவலக வளாகங்கள் 13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டிஜிட்டல் ஊடக கண்காணிப்பு புதிய விதிக்கு இடைக்கால தடை’ - உயர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.