ETV Bharat / bharat

"தெலங்கானாவில் ஊழல் தலை விரித்தாடுகிறது" - பிரதமர் மோடி! - சந்திரசேகர ராவ்

தெலங்கானாவில் முடிவு பெற்ற மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை துவக்கியும், அடிக்கல் நாட்டியும் வைத்த பிரதமர் மோடி மாநிலத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாக கூறினார்.

Modi
Modi
author img

By

Published : Jul 8, 2023, 5:51 PM IST

வாராங்கல் : தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான மாநில அரசு மக்களுக்கு பல்வேறு வெற்று வாக்குறுதிகளை வழங்கி உள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்து உள்ளார்.

முடிவு பெற்ற மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி, தெலங்கானா மாநிலம் சென்றார். வாரங்கல் சென்ற பிரதமர் மோடி அங்கு உள்ள காளி கோயிலில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து மாநிலத்தில் 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவடைந்த திட்டங்களை துவக்கியும் வைத்தார்.

வாரங்கல் வந்த பிரதமர் மோடிக்கு, பாஜகவினர், பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் மோடி, தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு மக்களுக்கு வெற்று வாக்குறுதிகளை வழங்கி வருவதாக கூறினார். மேலும் தெலங்கானா அரசு மிகவும் ஊழல் நிறைந்த அரசாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

தெலங்கானாவில் தற்போதைய அரசு, பிரதமரையும், பாஜக அரசையும் தவறாகப் பயன்படுத்தி நான்கு விஷயங்களை செய்து வருவதாக பிரதமர் மோடி கூறினார். மாநிலத்தின் அதிகாரம் ஒரு குடும்பத்தின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும், தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சியை கலக்கத்தில் தள்ளி, ஊழல் நிறைந்த மாநிலமாக மாற்றி உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத எந்த திட்டமும் தெலங்கானாவில் இல்லை என்றும் முதலமைச்சர் கேசிஆரின் அரசு மிகவும் ஊழல் நிறைந்த அரசு என்றும் பிரதமர் மோடி பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியை விமர்சித்த பிரதமர் மோடி, அனைத்து வாரிசுக் கட்சிகளின் அடித்தளமும் ஊழலில் தான் உள்ளதாக கூறினார். வாரிசு அரசியலை நடத்தும் காங்கிரஸ் கட்சியின் ஊழலை நாடு முழுவதும் பார்த்ததாக தெரிவித்தார். மேலும் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பிஆர்எஸ் கட்சியின் ஊழல் அளவைப் பார்க்க முடிவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டும் தெலுங்கானா மக்களுக்கு ஆபத்தானது என்று பிரதமர் கூறினார். தெலுங்கானாவில் கே.சி.ஆர் தலைமையிலான அரசு, மக்களுக்கு பல வெற்று வாக்குறுதிகளை அளித்ததாகவும், மாநிலத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு நேரடியாக 12 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாகவும் கூறினார்.

மாநிலத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகள் மத்திய அரசின் நிதியில் இருந்து பெரும்பாலான பணிகளை செய்து வருவதாக கூறிய பிரதமர் மோடி தெலுங்கானாவில் உள்ள ஆயிரக்கணக்கான பஞ்சாயத்துகள் சிரமத்தை எதிர்கொள்வதாக குறிப்பிட்டார். மாநிலத்தில் உள்ள வாரிசு அரசியிலை கவிழ்க்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பணிகளுக்கு பாஜக அரசு அதிகளவில் பணம் செலவழிப்பதாகவும், மத்திய அரசின் பணி பழங்குடியினர், ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு உண்மையிலேயே அதிகாரம் அளித்துள்ளதாகவும் கூறினார். தேர்தலுக்கு முன் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வெற்று வாக்குறுதிகளையும், திட்டங்களையும் அறிவிக்கப் போவதில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

முன்னதாக பிரதமர் மோடியின் இந்த சுற்றுப்பயணத்தை புறக்கணிக்க உள்ளதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வந்தே பாரத் உள்பட அனைத்து ரயில்களில் டிக்கெட் விலை குறைப்பு... ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.