ETV Bharat / bharat

இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் ரூபாயில் வர்த்தகம்... பிரதமர் மோடி தகவல்!

author img

By

Published : Jul 15, 2023, 6:14 PM IST

இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே வர்த்தகத்தை அந்தந்த நாடுகளின் நாணயத்தில் மேற்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

Modi
Modi

அபுதாபி : இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான வர்த்தகத்தை அந்தந்த நாடுகளின் நாணயங்களில் மேற்கொள்ள முடிவு செய்து உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி அங்கிருந்தபடியே அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றார். ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானை சந்தித்த பிரதமர் மோடி பல தரப்பட்ட இரு தரப்பு உறவுகளை மேலும் ஆழ்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின் இடையே இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான வர்த்தகத்தை அந்தந்த நாடுகளின் நாணயத்தில் மேற்கொள்ள ஒப்புக் கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடியின் இந்த நகர்வு, இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அதிபருடனான இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான பரந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு பிறகு, இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான வர்த்தகம் 20 சதவீதம் வரை அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார்.

இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான வர்த்தகத்தை அந்தந்த நாடுகளின் நாணயங்களில் மேற்கொள்ள போடப்பட்டு உள்ள ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான பொருளாதார ஒத்துழைப்பையும், பரஸ்பர நம்பிக்கையையும் எடுத்துக் காட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானிடம் இருந்து தான் எப்போதும் சகோதரத்துவ அன்பைப் பெற்றதாக தெரிவித்த மோடி இரு நாடுகளுக்கு இடையேயான உறவு விரிவடைந்த விதத்தில், அவரது பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் உங்களை உண்மையான நண்பராக பார்ப்பதாக ஐக்கிய அரபு அமீரக அதிபரிடம் தான் தெரிவித்ததாக கூறினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள COP-28 உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அதிபரின் தலைமையில் நடந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

முன்னதாக ஐக்கிய அரபு அமீரக வந்த பிரதமர் மோடிக்கு அதிபர் மாளிகையான Qasr-Al-Watan-ல் வைத்து அந்நாட்டு அதிபர் உற்சாக வரவேற்பு அளித்தார். அணிவகுப்பு மரியாதையில் குழந்தைகள் கலந்து கொண்டு மூவர்ண கொடியை அசைத்து வரவேற்றதை பிரதமர் மோடி பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.

இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே பொருளாதர ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில் பரந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கடந்த கரோனா பரவலின் போது கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இதையும் படிங்க : Adani : வங்காளதேச பிரதமருடன் கவுதம் அதானி சந்திப்பு... கோடா மின்உற்பத்தி ஆலை ஒப்படைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.