டெல்லி: ராணுவத் தளபதி எம்.எம். நரவனே பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ராணுவத்தால் செய்யப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசுகளுடன் இணைந்து பணியாற்ற ராணுவம் தயாராக உள்ளது. ராணுவ மருத்துவர்கள் பல்வேறு மாநிலங்களில் தங்களது சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவம் தற்காலிக மருத்துவமனைகளை அமைத்து வருகிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ராணுவ மருத்துவமனைகள் எங்கு வேண்டுமானலும் திறக்க வழிவகை செய்யப்படும். குடிமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைகளை அணுகலாம்.
இறக்குமதி செய்யப்பட்ட ஆக்ஸிஜன் டேங்கர்கள் மற்றும் அவற்றை நிர்வகிக்க சிறப்புத் திறன்கள் தேவைப்படும் வாகனங்களுக்குத் தேவையான உதவிகளை ராணுவம் வழங்கும் என்று அவர் பிரதமருக்கு உறுதியளித்தார்.