ஏப்ரல் 6ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் தொடக்க நாள். 41 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் 1980ஆம் ஆண்டு பாஜக தொடங்கப்பட்டது. அடல் பிகாரி வாஜ்பாய் பாஜகவின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், பாஜகவின் 41ஆவது தொடக்க நாள் விழாவில், பிரதமர் மோடி காணொலி கலந்தாய்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "கட்சி தனிநபரைவிட பெரியது, கட்சியைவிட நாடு பெரியது என்பதை எப்போதும் நினைவில் வைத்துத்தான், பாஜக செயல்பட்டுவருகிறது.
சட்டப்பிரிவு 370ஐ நீக்கி, காஷ்மீருக்கு அரசியலமைப்பு உரிமையை வழங்குவதன் மூலம், எங்கள் அரசு சியாம பிரசாத் முகர்ஜியின் கனவு நனவாகியுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மன்மோகன் சிங் வராததால் களையிழந்த விவிஐபி வாக்குச்சாவடி!