டெல்லி: நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று காலை ராஷ்டிரபதி பவனில் அரசாங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தலைநகரில் உள்ள குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
நேற்று (செப்- 5) இந்தியா வந்த ஹசீனாவை வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வரவேற்றார். இதன் தொடர்ச்சியாக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோரை சந்திக்க உள்ளார். இன்று பிற்பகலில் ஹசீனா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இருதரப்பு பேச்சு வார்த்தை நடக்க உள்ளது.
இந்தியா மற்றும் பங்காளதேசத்திற்கு இடையே இருதரப்பு உறவு கடந்த ஆண்டோடு (2021 ) 50 வது ஆண்டை கடந்தது. இந்த 50 ஆண்டு நிறைவின் பின்னர் இந்தியாவிற்கு ஹசீனா வருவது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டு பங்களாதேஷின் 50 வது ஆண்டு சுதந்திரம் தினக் கொண்டாட்டம், வங்க தேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100 வது பிறந்தநாளைக் குறிக்கும் விதமாக கொண்டாடப்பட்டது.
பிரதமர் மோடி கடந்த 2021 இல் வங்கதேசம் சென்றார். டெல்லி மற்றும் டாக்கா உட்பட உலகின் 20 தலைநகரங்களில் மைத்ரி திவாஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. 2015ஆம் ஆண்டு முதல் இரு நாட்டு பிரதமர்களும் 12 முறை சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதையும் படிங்க:செப்டம்பர் 8 அன்று பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட டெல்லி சென்ட்ரல் விஸ்டா அவன்யூ திறக்கிறார்