டெல்லி: 1893ஆம் ஆண்டு இதே நாளில் சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் தமது தலைசிறந்த உரைகளுள் ஒன்றை வழங்கியதாக பிரதமர் நரேந்தி மோடி கூறியுள்ளார். அவரது உரை, இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு குறித்த ஒரு பார்வையை உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தது என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “செப்டம்பர் 11ஆம் தேதி, சுவாமி விவேகானந்தருடன் சிறப்பு தொடர்புள்ள தினமாகும். 1893ஆம் ஆண்டு இதே நாளில்தான் சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் தமது தலைசிறந்த உரைகளுள் ஒன்றை வழங்கினார். அவரது உரை, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த ஒரு பார்வையை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டியது.
இந்தியாவின் கலாச்சார நெறிமுறைகள் மற்றும் அதன் பழங்கால விழுமியங்களை ஈர்க்கும் வகையில் இருந்தது. அதே நேரத்தில் ஒவ்வொரு மதத்தையும் தத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்வதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நாங்கள் அவருடைய லட்சியங்களால் ஈர்க்கப்பட்டு, நமது தேசத்திற்கான அவரது கனவுகளை நனவாக்க உறுதிபூண்டுள்ளோம் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நீட் தேர்வில் வெற்றிபெற்ற 4 பழங்குடியின மாணவர்கள்