கெவாடியா (குஜராத்): இந்திய ராணுவத்தின் ஒருங்கிணைந்த தளபதிகள் (கமாண்டர்கள்) மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சென்றடைந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (மார்ச்6) காலை குஜராத் மாநிலத்தின் கெவாடியா நகருக்கு சென்றடைந்தார். இந்தக் கருத்தரங்கு ஒற்றுமை சிலை அருகே நடைபெறுகிறது. இதில் இந்திய ராணுவ உயர் அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர்.
முன்னதாக அகமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய நரேந்திர மோடி அங்கிருந்து 200 கிலோ மீட்டர் சாலை மார்க்கமாக காரில் பயணிக்கிறார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் விஜய் ரூபானி, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், துணை முதலமைச்சர் நிதின் பட்டேல் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மாநாட்டில் பங்கெடுக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமையே கெவாடியா சென்றுவிட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் சங்கல்ப் மகாசம்பர்க் யாத்திரை; தமிழ்நாட்டில் வீடு வீடாக வாக்கு சேகரிக்கிறார் அமித் ஷா!