டெல்லி: இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்" என்று பதிவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும் செவலில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் 307ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுவருகிறது. அவரது நினைவு மாளிகையில் உள்ள முழு உருவ வெண்கல சிலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர். பலர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி கேரளா பயணம்