கோபன்ஹேன்: அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இரண்டாவது நாளான நேற்று டென்மார்க் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் டென்மார்க் ராஜாங்கத்தின் ராணி இரண்டாம் மார்கிரேத்தை அவரது மாளிகையில் சந்தித்தர். பிரதமரை வரவேற்ற ராணி அவருடன் கலந்துரையாடினார். மேலும் அரச குடுமபத்தினரையும் அவர் சந்தித்தார்.
ராணிக்கு மோடி வாழ்த்து: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ட்விட்டரில் ராணி மார்கிரேத்தின் பொன்விழா வருவதையொட்டி பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தாக குறிப்பிட்டு பதிவு ஒன்று வெளியானது. இந்திய-டென்மார்க் இடையேயான உறவு குறித்து பிரதமர் மோடி விளக்கினார். மேலும் ராணியின் அரண்மனையில் மோடிக்கு விருந்தளிக்கப்பட்டது.
முன்னதாக நேற்று (மே3) காலை டென்மார்க் சென்ற மோடியை டென்மார்க் பிரதமர் மேட் ஃப்ரட்ரிக்சன் வரவேற்றார். இருவரும் உக்ரைன் போர் குறித்து விவாதித்தனர். மேலும் அங்கு வாழும் இந்தியர்களை சந்தித்த மோடி மத்தளம் வாசித்தார். ஃபிரடிக்சன் கூறுகையில், இரு நாடுகளின் உறவும் பலப்படுத்துவதற்கு இந்தசந்திப்பு சிறந்த பாலமாக அமையும்.
இன்று பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி அதற்கு முன்னதாக டென்மார்க்கில் நடக்க இருக்கும் இந்தோ- நார்டிக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளகிறார். பிரதமர் மோடியின் அரசு முறை பயணம் இன்றுடன் நிறைவடைகிறது.
-
Met Her Majesty, the Queen of the Kingdom of Denmark, Margrethe II in Copenhagen. pic.twitter.com/YZkS1BJbIH
— Narendra Modi (@narendramodi) May 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Met Her Majesty, the Queen of the Kingdom of Denmark, Margrethe II in Copenhagen. pic.twitter.com/YZkS1BJbIH
— Narendra Modi (@narendramodi) May 3, 2022Met Her Majesty, the Queen of the Kingdom of Denmark, Margrethe II in Copenhagen. pic.twitter.com/YZkS1BJbIH
— Narendra Modi (@narendramodi) May 3, 2022
இதையும் படிங்க:ஜெர்மன் அதிபருடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை!