ETV Bharat / bharat

Mann Ki Baat : "மன் கி பாத்" - 100-வது எபிசோடில் உரையாற்றும் பிரதமர் மோடி!

author img

By

Published : Apr 30, 2023, 10:26 AM IST

Updated : Apr 30, 2023, 11:21 AM IST

பிரதமர் மோடியின் மனதின் குரல் வானொலி உரை 100வது பகுதி என்ற மைல்கல்லை எட்டி உள்ளது. அதை கொண்டாடும் வகையில் மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

Mann Ki Baat
Mann Ki Baat

டெல்லி : பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி உரையான மன் கி பாத் நிகழ்ச்சியின் 100வது எபிசோட் இன்று ஒலிபரப்பப்பட உள்ளது. உலகின் முழுவதும் ஒலிபரப்படும் இந்த நிகழ்ச்சியை லட்சக்கணக்கான மக்கள் கேட்க உள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் மன் கி பாத் நிகழ்ச்சியின் 100வது எபிசோட் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் முதல் முறையாக அக்டோபர் 3 ஆம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதன்பின், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு 2 வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமர் மோடியின் 100 வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.

நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் ஒலிபரப்ப முழு அளவில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 22 இந்திய மொழிகளில் பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்திய மொழிகள் தவிர்த்து 29 கிளை மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி 100வது எபிசோட் என்ற மைல்கல்லை எட்டியதை அடுத்து அமெரிக்கா, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நேரலை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணிக்கு இந்த உரை ஒலிபரப்பாகும் என்றும் ஐநாவின் அறங்காவலர் கவுன்சில் சேம்பரில் உரை ஒலிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகத்திலும், நியூ ஜெர்சியில் உள்ள புலம் பெயர் இந்தியர்கள் சார்பிலும் பிரதமரின் உரையை ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் மன் கி பாத் 100 வது எபிசோடை 63 மொழிகளில் மொழி பெயர்த்து ஒலிபரப்பு செய்ய அகில இந்திய வானொலி திட்டமிட்டுள்ளது.

மன் கி பாத் நிகழ்ச்சியின் 100 வது எபிசோடை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தன் ட்விட்டர் பக்கத்தில், மன் கி பாத் நிகழ்ச்சியானது துப்புரவு, சுகாதாரம், மகளிரின் பொருளாதாரத்திற்கு அதிகாரம் அளித்தல் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளுடன் தொடர்புடைய பிற விஷயங்கள் ஆகியவற்றில் சமூகத்தினர் தலைமையிலான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு ஊக்குவித்து வருகிறது. 100-வது நிகழ்ச்சிக்காக நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் என பதிவுட்டு உள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியின் 100வது எபிசோடை விளம்பரம்படுத்தும் முயற்சியில் மத்திய அரசும், பாஜகவும் பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டது. கடந்த வாரம் மன் கி பாத் நிகழ்ச்சியின் 100 வது எபிசோடை முன்னிட்டு டெல்லியில் மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா, நடிகர் அமீர் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Get ready for a historic moment 🎉 as the 100th episode of PM Modi's "Mann Ki Baat"🎙️ is set to go live on April 30th in Trusteeship Council Chamber at @UN HQ!

    📻 #MannKiBaat has become a monthly national tradition, inspiring millions to participate in 🇮🇳’s developmental journey pic.twitter.com/6ji4t1flmu

    — India at UN, NY (@IndiaUNNewYork) April 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க : பிலிப்பைன்சுக்கு ஆதரவு.. சீனாவுக்கு கடும் கண்டனம் - அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

Last Updated : Apr 30, 2023, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.