டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.24) இந்தாண்டுக்கான பால புரஸ்கார் விருது பெற்ற 29 குழந்தைகளுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடி, பிளாக்செயின் (blockchain technology) தொழில்நுட்பத்தின் உதவியுடன் விருது பெற்றவர்களுக்கு டிஜிட்டல் முறையில் சான்றிதழ்களை வழங்கினார்.
புதுமையான கண்டுபிடிப்புகள், கல்வித்திறன், விளையாட்டு, கலை மற்றும் கலாசாரம், சமூக சேவை மற்றும் வீர தீர செயல் ஆகிய துறைகளில் அபரிவிதமான திறமை, சாதனைப் படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் பால புரஸ்கார் விருது ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் வசிக்கும் 5 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 18 வயதுக்கு மிகாமல் உள்ள குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்தாண்டு இவ்விருதுக்கு 29 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்றவர்கள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவில் பங்கேற்பார்கள்.
விருது பெற்றவர்களுக்கு பதக்கம், ரூ. 1 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
காணொலி வாயிலாக நிகழ்ச்சி நடைபெற்றதால், விருது பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் ரொக்கப் பணம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.17 லட்சம் மோசடி வழக்கு; ஈபிஎஸ் உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்