கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், ஐஐடி கான்பூரில் இருந்து மோதி ஜீல் வரையில் 9 கி.மீ. ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவையை, பிரதமர் மோடி இன்று(டிச.28) தொடங்கி வைத்தார். இதையடுத்து ஐஐடி கான்பூரில் இருந்து மோதி ஜீல் வரை பயணம் செய்து, பார்வையிட்டார். அவருடன் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இருவரும் மெட்ரோவில் பயணம் செய்தனர்.
- கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் முழு நீளம் 32 கி.மீ.
- சுமார் 11,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.
- இந்தத் திட்டம் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
- முதல்கட்டமாக, 9 கி.மீ. ரயில் பாதை முடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு!