பெங்களூரு: ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியான "ஏரோ இந்தியா 2023" 14ஆவது பதிப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.13) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள விமானப்படை தளத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளின் திறனை வெளிக்கொணரும் விதமாக அமையும் ஏரோ இந்தியா 2023 கண்காட்சி அமையும். இந்தியத் தொழில்நுட்ப மேம்பாட்டின் மையமாகத் திகழும் கர்நாடகாவில், ஏரோ இந்தியா கண்காட்சி நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
-
Aero India is a wonderful platform to showcase the unlimited potential our country has in defence and aerospace sectors. https://t.co/ABqdK29rek
— Narendra Modi (@narendramodi) February 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Aero India is a wonderful platform to showcase the unlimited potential our country has in defence and aerospace sectors. https://t.co/ABqdK29rek
— Narendra Modi (@narendramodi) February 13, 2023Aero India is a wonderful platform to showcase the unlimited potential our country has in defence and aerospace sectors. https://t.co/ABqdK29rek
— Narendra Modi (@narendramodi) February 13, 2023
இது விமானத்துறையில் கர்நாடக மாநில இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும். நாட்டை வலுப்படுத்தும் நோக்கில், தங்களது தொழில் நுட்பத் திறன்களைப் பாதுகாப்புத் துறையில் ஈடுபடுத்த வேண்டும் என்று கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன். இந்தியா நம்பகமான பாதுகாப்பு நாடாக புதிய உயரங்களை எட்டி வருகிறது.
புதிய சிந்தனையோடும், அணுகுமுறையோடும் நாடு முன்னேறும் போது, அதன் நடைமுறைகளும் அதற்கேற்ப மாறத்தொடங்கும். 21ஆம் நூற்றாண்டின் புதிய இந்தியா எந்த வாய்ப்பையும் இழக்காது, முயற்சியில் தொய்வும் காட்டாது. ஏரோ இந்தியாவின் கர்ஜனை இந்தியாவின் சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்தின் ஒலியாக உள்ளது.
இந்தியாவின் வலிமையையும், திறன்களையும் "ஏரோ இந்தியா 2023" பிரதிபலிக்கிறது. ஒரு நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், பாதுகாப்புத் துறையின் நோக்கத்தை வெளிப்படுத்துவதுடன், இந்தியாவின் தன்னம்பிக்கையையும் இது பறைசாற்றுகிறது. இன்று உலகின் 75 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தொடங்கியுள்ளது. 2024-25ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதிகளை 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதை 5 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஆளுநர் தாவர் சந்த் கெலாட், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சியில் 80-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. அதில் 100 வெளிநாட்டு மற்றும் 700 உள்நாட்டு நிறுவனங்கள் அடங்கும்.
இந்த கண்காட்சியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானம் (எல்.சி.ஏ) தேஜாஸ், ஹெச்.டி.டி-40, டோர்னியர் இலகு ரக ஹெலிகாப்டர் (எல்.யு.ஹெச்), எதிர் தாக்குதலில் ஈடுபடும் இலகு ரக ஹெலிகாப்டர் (எல்.சி.ஹெச்) மற்றும் சிறப்பு வாய்ந்த இலகு ரக ஹெலிகாப்டர் (ஏ.எல்.ஹெச்) விமானங்கள், உதிரி பாகங்கள் காட்சிப்படுத்தப்படும். இதன் மூலம் ஏற்றுமதியை ஊக்குவிக்கு பாதுகாப்புத்துறை திட்டமிட்டுள்ளது.
அதேபோல ஏர்பஸ், போயிங், டசால்ட் ஏவியேஷன், லாக்ஹீட் மார்ட்டின், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், ஆர்மி ஏவியேஷன், ஹெச்.சி ரோபோடிக்ஸ், எஸ்.ஏ.ஏ.பி., சஃப்ரான், ரோல்ஸ் ராய்ஸ், லார்சன் & டூப்ரோ, பாரத் ஃபோர்ஜ் லிமிடெட், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்), பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (பி.டி.எல்) மற்றும் பி.இ.எம்.எல் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இதையும் படிங்க: ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்