ETV Bharat / bharat

உக்ரைன் விவகாரம்: ஐரோப்பிய தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு - உக்ரைன் ரஷ்யா போர் நிலவரம்

உக்ரைன் பேர் நிலவரம் தொடர்பாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர், பிரான்ஸ் அதிபர் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைப்பேசி மூலம் பேசியுள்ளனர்.

PM Modi
PM Modi
author img

By

Published : Mar 2, 2022, 9:12 AM IST

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படைகள் போர் தாக்குதலில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இந்த போரை நிறுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள், ஐநா சபை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து முயற்சித்துவருகின்றன. உக்ரைன் நாட்டில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள இப்போர் ஐரோப்பிய கண்டத்தின் அமைதிக்கே இது பங்கம் ஏற்படுத்தும் என ஐரோப்பிய நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஐரோப்பிய கவுன்சில் அமைப்பின் தலைவரான சார்லஸ் மைக்கெல் இவ்விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் தொடர்புகொண்டு பேசியுள்ளார். உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்த மைக்கல், இந்த போர் தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழந்ததற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

போர் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு இந்திய உடனடியாக மருத்துவ உதவிகள் மற்றும் நிவாரணப் பொருள்களை அனுப்பவுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை எட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு சர்வதேச அமைப்புகள் தொடர் முயற்சியில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் பிரதமர் நரேந்திர மோடியிடம் உக்ரைன் போர் குறித்து தொலைப்பேசி மூலம் உரையாடியுள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'நான் பாசிஸ்ட்டா... மனது வலிக்கிறது' - மரணமடைந்த ரஷ்ய வீரர் தாயிற்கு எழுதிய குறுஞ்செய்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.