ETV Bharat / bharat

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் - பிரதமர் மோடி

author img

By

Published : Apr 14, 2022, 12:42 PM IST

தமிழ்ப் புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல், அஸ்ஸாம், ஒடிசா மாநில புத்தாண்டுக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.

மோடி
மோடி

சித்திரை மாதம் முதல் நாளான இன்று, தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் புத்தாண்டை கொண்டாடி, வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் வாழ்த்துச் செய்தி பதிவிட்டுள்ள அவர், " தமிழ் சகோதர சகோதரிகளுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்றும், வரும் புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோஷங்களையும் தரட்டும் என்றும், அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துகள்" என்றும் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், அஸ்ஸாம் மாநில அறுவடைத் திருநாளான போஹ் பிஹு (Bohag Bihu) மற்றும் ஒடிசா மாநில புத்தாண்டான வைசாகி (Vaisakhi)தினத்தையொட்டியும், அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த புத்தாண்டு அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் கொண்டுவர பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டு- ரஜினிகாந்த் வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.