ETV Bharat / bharat

பிரதமர் மோடியை குதூகலமாக வரவேற்ற இந்தியர்கள்! - உற்சாகத்தில் மோடி!

அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடியை ஜெர்மன் வாழ் இந்தியர்கள் குதூகலத்துடன் வரவேற்றனர். கை குலுக்கியும் செல்பி எடுத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பிரதமர் மோடியை குதூகலமாக வரவேற்ற இந்தியர்கள்! - உற்சாகத்தில் மோடி!
பிரதமர் மோடியை குதூகலமாக வரவேற்ற இந்தியர்கள்! - உற்சாகத்தில் மோடி!
author img

By

Published : May 2, 2022, 7:52 PM IST

பெர்லின்: அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி இன்று முதல்கட்டமாக ஜெர்மனி சென்றார். ஜெர்மனி சென்ற மோடிக்கு அந்நாட்டு அதிபர் ஒலாஃப் உற்சாக வரவேற்பு அளித்தார். பின்னர் அந்நாட்டின் வணிகத்தலைவர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து ஜெர்மன் வாழ் இந்தியர்களை மோடி சந்தித்தார்.

இந்தியர்களை சந்திக்க சென்ற மோடியை கண்டதும் அவர்கள் அனைவரும் குதூகலத்துடனும், ஆரவாரத்துடனும் வரவேற்றனர். பின்னர் கையசைத்து மோடி அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பல இந்திய வம்சாவளி குழந்தைகளும் அவர்களது பெற்றோருடன் வந்திருந்தினர். அவர்களில் சிலர் பிரதமருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

பிரதமர் மோடியை குதூகலமாக வரவேற்ற இந்தியர்கள்! - உற்சாகத்தில் மோடி!

சிறுவனுடன் சேர்ந்து பாடல்: பிரதமர் மோடியை சந்தித்த சிறுவன் தேசபக்தி பாடல் பாட உடன் மோடியும் சேர்ந்து பாடினார். பின்னர் அனைவரிடமும் பேசிவிட்டு சென்றார். பிரதமர் மோடியை சந்தித்து இந்தியர்கள் அனைவரும் அவர்களது மகிழ்ச்சியை பெருமிதத்துடன் வெளிப்படுத்தினர்.

ஜெர்மன் - இந்தியா உறவை வலுப்படுத்தும்: இந்தியா மற்றும் ஜெர்மன் இடையே ஆன 6வது அரசு ரீதியான சந்திப்பு இதுவாகும். மேலும் பிரதமர் ஜெர்மன் அதிபர் மற்றும் அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் என பல பேருடன் கலந்துரையாட உள்ளார். இதன் மூலம் இரு நாடுகளுக்கான நட்பு உறவை மேம்படுத்தலாம் என மோடி நம்பிக்கை தெரிவித்தார். இதனையடுத்து நாளை மோடி டென்மார்க் செல்ல இருக்கிறார்.மே 4 அன்று பிரான்ஸ் சென்று பின்னர் இந்தியா திரும்புகிறார்.

இதையும் படிங்க:ஜெர்மனியில் சிறுவனுடன் தேசபக்தி கீதம் பாடிய நரேந்திர மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.