ETV Bharat / bharat

செகந்திராபாத் - திருப்பதி வந்தே பாரத் ரயில் துவக்கம் - பிரதமர் விழாவை கேசிஆர் புறக்கணிப்பா? - PM Modi Flags Vande Bharat special train

செகந்திராபாத் - திருப்பதி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

PM Modi
PM Modi
author img

By

Published : Apr 8, 2023, 1:39 PM IST

ஐதரபாத் : பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு செல்கிறார். முதலில் தெலங்கானா வந்த பிரதமர் மோடி செகந்திராபாத் - திருப்பதி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார்.

ஐதரபாத் வந்த பிரதமர் மோடிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். கடந்த மூன்று மாத இடைவெளியில் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய இரண்டு தெலங்கு மொழி பேசும் மாநிலங்களிடையே இயக்கப்படும் 2 வது வந்தே பாரத் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

செகந்திராபாத் - திருப்பதி இடையிலான புதிய வந்தே பாரத் ரயில் சேவையால் இரண்டு பகுதிகளுக்கும் இடையிலான பயண தூரம் மூன்றரை மணி நேரமாக குறையும் என ரயில்வே துறை தெரிவித்து உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் இதேபோல் செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி துவக்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பயணத்தின் போது இரு தெலங்கு மாநிலங்களும் பயன்பெறக் கூடிய வகையிலான ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்புடைய உள்கட்டமைப்பு, வளர்ச்சி சார்ந்த திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். மேலும் ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்பிலான பிபிநகர் எய்ம்ஸ் மற்றும் 7 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான இரு தெலங்கு மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் செகந்திராபாத் ரயில் நிலையத்தை 720 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் திட்டத்தையும் இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். தொடர்ந்து பரேட் மைதானத்தில் நடைபெறும் மெகா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு ஐதரபாத் மாநகரமே போலீஸ் வசமானது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. போலீசார், பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனிடையே பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழாக்கில் தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை. பிரதமர் கலந்து கொள்ளும் அரசு விழாவை முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் புறக்கணித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலங்கானாவை தொடர்ந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதையும் படிங்க : Vande Bharat: சென்னை - கோவை வந்தே பாரத்.. டிக்கெட் விலை நிலவரம், மக்களின் கோரிக்கைகள் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.