ETV Bharat / bharat

கார் மீது பேருந்து மோதி விபத்து..! 11 பேர் உயிரிழப்பு.. - இரங்கள்

மத்திய பிரதேசத்தில் கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Betul Bus Accident  Betul Road Accident  MP Betul Bus Accident  PM Modi  Road Accident  கார் மீது பேருந்து மோதி விபத்து  விபத்து  மத்திய பிரதேசத்தில் கார் பேருந்து விபத்து  பிரதமர் மோடி  இரங்கள்  பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்
கார் மீது பேருந்து மோதி விபத்து
author img

By

Published : Nov 4, 2022, 10:09 AM IST

மத்திய பிரதேசம்: பெதுல் மாவட்டம் ஜல்லார் அருகே இன்று (நவம்பர் 4) அதிகாலை எஸ்யூவி கார் மீது பேருந்து மோதியது. இதில், ஆறு ஆண்கள், மூன்று பெண்கள், ஐந்து வயது சிறுமி ஒருவர் மற்றும் பச்சிளம் குழந்தை என 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள், அமராவதியிலிருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

  • Betul, Madhya Pradesh | 11 people died in a bus accident which collided with a car near Jhallar police station. One injured person has been admitted to a hospital: SP Betul Simala Prasad pic.twitter.com/aNPQmt5VIF

    — ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) November 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிசிடிவி: பட்டாக்கத்தியால் சொமாட்டோ ஊழியரை தாக்கி பீட்சா, பர்கரை பறித்து சென்ற இளைஞர்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.