ETV Bharat / bharat

தொழில்சாலைகள்தான் வளர்ச்சியின் தூண்கள் - பிரதமர் மோடி - தொழில் வளர்ச்சி குறித்து மோடி

நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்சாலைகள்தான் முக்கிய தூணாக விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

PM Modi
PM Modi
author img

By

Published : Aug 11, 2021, 7:03 PM IST

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு(CII) சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசுகையில், "இந்தியாவின் வளர்ச்சியில் தொழில்துறையினர் பங்களிப்பு அபாரமானது.

முடங்கியிருந்த பொருளாதாரம் உங்களின் கடும் உழைப்பால் மீண்டும் எழுச்சிப் பெறத் தொடங்கியுள்ளது. வர்த்தக நடவடிக்கை உயர்த்தும் அனைத்து விதமான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

வரலாற்றிலேயே அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளும், அந்நிய செலாவனியும் இந்தியாவிடம் உள்ளது. புதிய உலகத்துடன் சேர்ந்து வளர்ச்சிபெற புதிய இந்தியா தயாராக உள்ளது. கரோனா காலத்திலும் அரசு உறுதியுடன் சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது.

பெருந்தொற்று காலத்தில் தொழில்சாலைகள்தான் முகக்கவசம் தொடங்கி ஆக்ஸிஜன் வரை உற்பத்தி செய்து நாட்டிற்கு கொடுத்தன. தொழில்முனைவோர் தொடர்ந்து முதலீடுகளை அதிகரித்து நாட்டின் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

இந்த கருத்தரங்கில் நாட்டின் முன்னணி தொழில்துறையினர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: தடுப்பூசி போடனும், இல்லன கரோனா டெஸ்ட் எடுக்கனும் - கேரள மதுப்பிரியர்களுக்கு கெடுபிடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.