ETV Bharat / bharat

உலக தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலிடம்

உலகின் பிரபலமான தலைவர்களுக்கான கருத்துக்கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

உலகின் பிரபலமான தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்

author img

By

Published : Feb 4, 2023, 4:12 PM IST

வாஷிங்டன்: உலகளவில் பிரபலமான தலைவர்களுக்கான கருத்துக்கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி 78 விழுக்காடு மக்கள் ஆதரவுடன் முதலிடம் பிடித்துள்ளார். இந்த கருத்துக்கணிப்பை அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள மார்னிங் கன்சல்ட் என்னும் நிறுவனம் நடத்தியது. ஜனவரி 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் குறித்து அந்த நாடுகளின் மக்களிடம் கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.

இந்த கருத்துக்கணிப்பின் முடிவில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு 78 விழுக்காடு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடியை தொடர்ந்து மெக்ஸிகோ நாட்டின் அதிபர் லோபஸ் ஒபரடோர் 68 விழுக்காடு வாக்குகள் பெற்று 2ஆவது இடத்தில் உள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டு அதிபர் ஆலைன் பெர்செட் 62 விழுக்காடு வாக்குகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய அதிபர் அந்தோணி அல்பேன்ஸ் 58 விழுக்காடு வாக்குகளை பெற்று 4ஆவது இடத்தில் உள்ளார். இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமர் ஜியோர்ஜியா மேலோனி 52 விழுக்காடு வாக்குகளுடன் 5ஆவது இடத்தை பிடித்துள்ளார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 50 விழுக்காடு வாக்குகள் பெற்று 6ஆவது இடத்தை பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 40 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்று 7ஆவது இடத்தை மட்டுமே பெற்றுள்ளார். அவருக்கு எதிராக 52 விழுக்காடு மக்கள் வாக்களித்துள்ளனர். பைடனை தொடர்ந்து, முக்கிய தலைவர்களில் கனடா பிரதமர் ஜஸ்டின் துரூடோ 40 விழுக்காடு வாக்குகளுடன் 9ஆவது இடத்திலும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 30 விழுக்காடு வாக்குகளுடன் 12ஆவது இடத்திலும் உள்ளனர். குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அப்போது முதலமைச்சராக பிரதமர் மோடி இருந்தார். இந்த கலவரத்துக்கும் மோடிக்குமான பங்கு குறித்து பிபிசி டூ செய்தி நிறுவனம் ஆவணப்படம் உருவாக்கி ஜனவரி 17ஆம் தேதி வெளியிட்டது. இந்த ஆவணப்படம் மூலம் பிரதமர் மோடிக்கு எதிரான தகவல்களை திட்டமிட்டு பகிர்ந்துள்ளதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது.

நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மத்திய அரசு பிபிசி ஆவணப்படத்துக்கு இந்தியாவில் தடைவிதித்தது. இந்த தடை தனிப்பட்டது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது என்று மூத்த பத்திரிகையாளர்கள் என் ராம், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மற்றும் சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மத்திய அரசு 3 வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றதம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட் - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.