ETV Bharat / bharat

பிரான்ஸிற்கு இந்தியா துணைநிற்கும் - பிரதமர் மோடி - கரோனா

டெல்லி: பயங்கரவாதம், பிரிவினைவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிரான்ஸிற்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

PM Modi
PM Modi
author img

By

Published : Dec 8, 2020, 6:53 AM IST

Updated : Dec 8, 2020, 7:33 AM IST

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். பேச்சுவார்த்தையின்போது, ​​பிரான்ஸில் அண்மையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள நரேந்திர மோடி, "கரோனாவிற்குப் பிந்தைய சவால்கள், வாய்ப்புகள் குறித்து எனது நண்பர் இம்மானுவேல் மேக்ரானுடன் பேசினேன். பயங்கரவாதம், பிரிவினைவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பிரான்ஸுடன் துணைநிற்கும்" என்று தெரிவித்துள்ளார்.

  • Spoke with my friend @EmmanuelMacron on the challenges and opportunities presented by the post-COVID world. India stands by France in its fight against terrorism & extremism. The India-France partnership is a force for good in the world, including in the Indo-Pacific.

    — Narendra Modi (@narendramodi) December 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தடுப்பூசிகளின் அணுகலை மேம்படுத்துதல், கரோனாவிற்குப் பிந்தைய பொருளாதார மீட்பு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு, ஒத்துழைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், இணையப் பாதுகாப்பு, பலதரப்பு வலுப்படுத்துதல், காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர், பிராந்திய மற்றும் உலகளாவிய சிக்கல்கள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி, மேக்ரான் கலந்துரையாடினர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மை, சமீபத்திய ஆண்டுகளில் பெற்றுள்ள வலிமை குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்ததோடு, கரோனாவிற்குப் பிந்தைய காலத்தில் தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா மருந்து செலவை மத்திய அரசே ஏற்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம்

Last Updated : Dec 8, 2020, 7:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.