கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு காரணமாக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் விஜய் கஷ்யாப் உயிரிழந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பெருந்தொற்று காரணமாக உயிரிழக்கும் மூன்றாவது அமைச்சர் இவர் ஆவார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சார்தவால் தொகுதி உறுப்பினரான இவர், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராகப் பணியாற்றி வந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் பெருந்தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாஜகவைச் சேர்ந்த ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை 16 லட்சத்து 37 ஆயிரத்து 633 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில், 18 ஆயிரத்து 72 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: தனது அரசு இல்லத்தை கோவிட்-19 சிகிச்சை மையமாக மாற்றிய பிகார் எதிர்க்கட்சித் தலைவர்