இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களைத் தேர்வு செய்ய சுயேச்சையான தேர்வுக் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் வழிகாட்ட வேண்டும் என பொது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு(ADR- Association for Democratic Reforms) இந்த பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
"ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பான அரசியல் சாசனம் சுதந்திரமான, முறையான தேர்தல் நடைமுறையே ஆரோக்கியமான ஜனநாயகத்தை குறிக்கும் என்கிறது. இதற்கு தேர்தல் ஆணையம் அரசியல், நிர்வாகத் தலையீடுகளிலிருந்து விலகி இருத்தல் அவசியம் எனத் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் நிர்வாகத்தின் பங்கு என்பது அதன் தேவையை கேள்விக்குறியாக்கும் விதமாக உள்ளது" என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மரத்தை தனிமைப்படுத்தும் அறையாக மாற்றிய பி.டெக் மாணவர்