டெல்லி: இதுகுறித்து இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முன்னதாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவையை டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கலாம் என்றும் அதற்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், புதிய கோவிட் மாறுபாட்டின் Omicron அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச பயணிகள் விமான சேவையை தொடங்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த உலகளாவிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சர்வதேச பயணிகள் சேவை ஒத்தி வைக்கப்படுகிறது. மீண்டும் தொடங்குவதற்கான தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 மாதங்களுக்கும் மேல் சேவை நிறுத்தி வைப்பு
இந்தியாவில் கோவிட்-19 பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை நவம்பா் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளிடையே சில நிபந்தனைகளைப் பின்பற்றி விமானங்கள் இயக்கப்பட விருந்த நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிப்பு: விமான ஊழியர்களுக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தல்