டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது முதல் கரோனா தடுப்பூசியை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் செலுத்திக்கொண்டார்.
45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்றுமுதல் (ஏப்ரல் 1) தொடங்கியுள்ளது.
கரோனா தடுப்பூசி http://cowin.gov.in என்ற இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளலாம். மேலும், அருகிலுள்ள கரோனா தடுப்பூசி மையத்திற்கும் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இதுவரை மொத்தமாக ஆறு கோடியே 51 லட்சத்து 17 ஆயிரத்து 896 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா: 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம்