ETV Bharat / bharat

பிட்புல் நாய் கடித்ததில் சிறுவன் படுகாயம்! - குர்தாஸ்பூர் பிட்புல் நாய் கடித்த சம்பவம்

பிட்புல் நாய் கடித்ததில் 13 வயது சிறுவன் படுகாயமடைந்தான். சிறுவனின் தந்தைப்போராடி சிறுவனின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

DOG
DOG
author img

By

Published : Jul 31, 2022, 4:44 PM IST

குர்தாஸ்பூர்: பஞ்சாப் மாநிலம், படாலாவுக்கு அருகே உள்ள கோட்லி பாம் சிங் என்ற கிராமத்தைச்சேர்ந்த ஒருவர் தான் வளர்க்கும் செல்லப்பிராணியான பிட்புல் வகை நாயுடன் வீதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக தந்தையுடன் வந்த 13 வயது சிறுவனைப் பார்த்து, பிட்புல் நாய் குரைத்துள்ளது. பின்னர் உரிமையாளரின் பிடியிலிருந்து பாய்ந்தோடிய நாய், சிறுவனை கடிக்கத்தொடங்கியது. இதைக்கண்ட சிறுவனின் தந்தை, அவனைக்காப்பாற்ற முயற்சித்தார். ஆனால், நாயின் உரிமையாளர் நாயிடமிருந்து சிறுவனைப் பாதுகாக்க முயற்சிக்கவில்லை எனத் தெரிகிறது.

கடைசியில் சிறுவனின் தந்தை, நாயிடமிருந்து சிறுவனைக் காப்பாற்றிவிட்டார். ஆனால், அதற்குள் நாய் சிறுவனின் முகம், காது ஆகிய இடங்களில் கடித்துவிட்டது. படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறான். சிறுவனின் காதில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றபடி சிறுவன் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பிட்புல் உள்ளிட்ட ஆபத்தான நாய்களை செல்லப்பிராணியாக வளர்ப்பதை மக்கள் தவிர்ப்பது நல்லது.

இதையும் படிங்க:16 வயது கிரிக்கெட் பௌலரைப் பாராட்டிய ராகுல் காந்தி - பயிற்சிக்கு உதவ முன்வந்த ராஜஸ்தான் அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.