ETV Bharat / bharat

புதுச்சேரியில் பெண்கள் மட்டும் பயணிக்கும் வகையில் ஜிபிஎஸ், சிசிடிவியுடன் கூடிய 'பிங்க் பஸ்' - லைசென்ஸ் வழங்க மகளிருக்கு மட்டும் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்

பெண்கள் மட்டும் பயணிக்கும் வகையில் ஜிபிஎஸ், சிசிடிவி வசதியுடன் கூடிய பிங்க் பஸ் இயக்கப்படும் என புதுச்சேரி அமைச்சர் சந்திரப்பிரியங்கா தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பெண்கள் மட்டும் பயணிக்கும் வகையில் ஜிபிஎஸ், சிசிடிவியுடன் கூடிய 'பிங்க் பஸ்'

author img

By

Published : Sep 3, 2021, 10:00 PM IST

புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரப்பிரியங்கா, துறை சார் கோரிக்கைகளுக்கு பதிலுரைத்தார்.

அப்போது பேசிய அவர்,

- 'லைசென்ஸ் வழங்க மகளிருக்கு மட்டும் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.
- பெண்கள் மட்டும் பயணிக்கும் வகையில் ஜிபிஎஸ், சிசிடிவி வசதியுடன் கூடிய 'பிங்க் பஸ்' இயக்கப்படும்.
- மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து, காற்று மாசுபடுவதைக் குறைக்க, அந்தந்த வகை வாகனங்களில் சாலையிலிருந்து 50 விழுக்காடு வரி விலக்கு அளிக்கப்படும்
- இ ரிக்க்ஷா பயன்பாட்டை கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- மத்திய அரசு திட்டத்தின்கீழ் 200 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பயணிகளுக்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஸ்மார்ட் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் பேணப்படும்
- காரைக்கால் மாவட்டம், கீழகசகுடி மாணவர் விடுதியில் முதல் தளம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
- பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ், நடப்பாண்டில் இரண்டு மற்றும் மூன்றாம் தவணைத் தொகைகளான ரூபாய் 2 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் 6.70 கோடியில் 446 பயனாளிகளுக்கு முதல் தவணை வழங்கப்பட்டுள்ளது.

கலை மற்றும் பண்பாட்டுத்துறை

- கலை மற்றும் பண்பாட்டுத்துறை மூலம் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூபாய் 500 உயர்த்தி வழங்கப்படும்
- புதுச்சேரி கடற்கரை சாலையில் கலை மற்றும் பண்பாட்டுத்துறைக்குச் சொந்தமான இடத்தை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைத்து, அங்கு ஆர்ட் கேலரி மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று சந்திரப் பிரியங்கா பேசினார்

இதையும் படிங்க: கல்விக் கடன் ரத்து; தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு - அரசு அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.