ETV Bharat / bharat

விமானத்தில் சீக்கியர்களின் கிர்பான் வாளுக்கு தடை..? - டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு - Delhi

விமானத்தில் கிர்பான் கூர்வாளை சீக்கியர்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கக் கோரிய பொது நல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வாள்
வாள்
author img

By

Published : Dec 22, 2022, 8:51 PM IST

டெல்லி: ஹர்ஷ் விபோர் சிங்கால் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்தார். அதில், விமானப் பயணத்தின்போது சீக்கியர்கள் கிர்பான் கூர்வாளை கொண்டு செல்ல இருக்கும் அனுமதியை ரத்து செய்யக்கோரி தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் பயணிகளுக்கான ஒழுங்குமுறை விதிகள் பட்டியலில், சிவில் விமானப் பயணத்தின்போது சீக்கியர்களுக்கு கிர்பான் கூர்வாளை எடுத்துச்செல்ல மத்திய அரசு விதிவிலக்கு அளித்தது.

விமானப் பயணத்தின்போது கிர்பானை அனுமதிக்கும் விவகாரத்தில் தனது கருத்துகளை ஆராயகுழு அமைக்கக் கோரியும் ஹர்ஷ் சிங்கால் பொதுநல மனுவில் தெரிவித்து இருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், விமானப் பயணங்களின்போது கிர்பானை அனுமதிப்பது என்பது அரசின் கொள்கை என்றும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, அரசியலமைப்பின் 25 பிரிவின்கீழ் உள்ள மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை குறித்து கேள்வி கேட்கவில்லை என்றும், விமானப் பயணங்களின்போது கிர்பானை அனுமதிப்பது குறித்து ஆராய சிறப்புக் குழு அமைக்க வேண்டியதாக மனுதாரர் முறையிட்டார்.

சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு அறிக்கையில் கிர்பான் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு அதை எப்படி கொள்கையாக கொண்டு உள்ளது என்று மனுதாரர் கேள்வி எழுப்பினார்.

மேலும் விமானப் பயணத்தின்போது கிர்பான் ஆயுதத்தை அனுமதிப்பது குறித்து குழு அமைத்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும், அந்தக் குழு பரிந்துரைக்கும் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். இறுதியில் பொது நல மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: முதலீட்டுத் திட்டங்களை தேர்வு செய்வது எப்படி? - நிபுணர்கள் டிப்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.